உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

22 ஆண்டுகள் உறைநிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்!

உலக செய்திகள் 47 நிமிடங்கள் முன்
30 பார்வைகள்

கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) – கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன் ஜியோர்ஜோஸ், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நடந்த வீதி விபத்தொன்றில் உயிரிழந்தார்.

மகனின் பிரிவால் துயருற்ற தம்பதியினர், மீண்டும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க தீர்மானித்தனர்.

இதற்காக, 22 ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த கருவை பயன்படுத்த முடிவு செய்தனர்.

இருப்பினும், கிரேக்கத்தில் 54 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை அளிக்க சட்டப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வயது வரம்பை எட்டிய நிலையில் இருந்ததால், அந்த நாட்டின் தேசிய இனப்பெருக்க மருத்துவ அதிகார சபையிடம் விசேட அனுமதி பெற்று, ஏதென்ஸில் உள்ள மருத்துவமனையில் கிறிஸ்டினா 3.49 கிலோகிராம் எடையில் பெண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

உயிரிழந்த தங்கள் மகனின் நினைவாக இந்தக் குழந்தைக்கு ‘ஜோர்ஜியா’ என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.

22 ஆண்டுகள் பழமையான கரு மூலம் குழந்தை பிறந்தமை மருத்துவ உலகில் அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கிரேக்கத்தில் நிலவும் பிறப்பு விகிதக் குறைவைக் கருத்திற்கொண்டு, IVF சிகிச்சைக்கான 54 வயது வரம்புச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அந்த நாட்டு மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஏமன் மோதல்களில் ஒரே மாதத்தில் 1,500க்கும் அதிகமான வீரர்கள் இழப்பு!

ஏமன் அரசாங்கப் படைகளுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாட்டின் மேற்கு கடலோரப் பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்களில், கடந்த ஒரு மாத காலத்தில் மாத்திரம் இருதரப்பையும் சேர்ந்த…

52 0 0
உலக செய்திகள்

சவூதியின் குழாய் வழித்தடம் மூடல்: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்வு!

ஹார்முஸ் நீரிணையைத் தவிர்த்துச் செல்லும் தனது முக்கியமான குழாய் வழித்தடத்தை சவுதி அரேபியா மூடியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று (13) மசகு எண்ணெய் விலைகள் உயர்ந்தன. கிழக்கு நேரப்படி…

60 0 0
உலக செய்திகள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள்…

19 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0