உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

சவூதி எண்ணெய் உட்கட்டமைப்பு மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!!

உலக செய்திகள் 51 நிமிடங்கள் முன்
14 பார்வைகள்

சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாய் உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதலில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ செயற்கைக்கோள் நிழற்படங்களை அடிப்படையாகக் கொண்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 11ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதல், ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ஆளில்லா வானூர்திகள் மூலம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாகவும், இதனால் அந்நாட்டின் எண்ணெய் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 4 சதவீதம் வரை உடனடியாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு, எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0
உலக செய்திகள்

இரகசிய நீதிமன்ற உத்தரவால் அமெரிக்காவிலிருந்து ஆப்கான் பெண் நாடுகடத்தல்!

அமெரிக்காவில் சட்டப்பூர்வ நிரந்தர வசிப்பிட உரிமையைக் கொண்டிருந்த 47 வயதுடைய ஆப்கானிஸ்தானிய பெண் ஒருவரை, அந்த நாட்டின் இரகசிய நீதிமன்ற நடவடிக்கைகளின் மூலம் நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

50 0 0
உலக செய்திகள்

இந்தியாவில் மீட்கப்பட்ட ஒராங்குட்டான்கள் : இந்தோனேசியாவுடன் கூட்டு விசாரணை

இந்தியாவில் மீட்கப்பட்ட ஐந்து ஒராங்குட்டான் குட்டிகளை அவற்றின் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு மீள அனுப்புவது தொடர்பாக இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்தோனேசிய அரசு முதன்முறையாக…

22 0 0
உலக செய்திகள்

நயகரா ஆற்றில் உருவாக்கப்பட்ட இயற்கை வாழ்விடங்கள்!

கனடாவில் நயகரா ஆற்றின் கரையோர ஈரநிலங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிவடைந்ததைத் தொடர்ந்து, மீள்சுழற்சி செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் மரக் கழிவுகளை ஆற்றுப் படுகையில் நிலைநிறுத்தி…

20 0 0