உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்; சமூக மட்ட பிரதிநிதிகளுக்கு மறுக்கப்பட்ட உரிமை.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
31 பார்வைகள்

சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்த மின்விசிறிகள் இயங்க வைக்கப்படவில்லை.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது இன்றையதினம் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது திணைக்களங்களை சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்த மின் விசிறிகள் அனைத்தும் இயங்க வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்த இடங்களில் இருந்த மின்விசிறிகள் இயங்க வைக்கப்படவில்லை.

சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு முன்பாக பொலிஸார் அமர்ந்திருந்த நிலையில் அந்த இடத்து மின்விசிறிகளும் இயங்க வைக்கப்பட்டிருந்தன.

குறித்த மண்டபத்தில் இருந்த சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் வெப்பத்தை தாங்க முடியாமல் கைகளில் இருந்த கடதாசி மட்டைகளால் விசுறுவதை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் அந்த இடத்தில் இருந்த மின்விசிறிகளை இயங்க வைக்குமாறு அங்கிருந்த ஒருவர் கூறிய நிலையிலும் அந்த கோரிக்கையை பிரதேச செயலக உத்தியோகத்தர் அலட்சியப்படுத்தி, மின்விசிறியை இயங்க வைக்கவில்லை.

மக்களது வரிப்பணத்தில் திணைக்களங்கள் இயங்குகின்ற நிலையில் மக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுகின்றமை அங்கிருந்தவர்களை வெறுப்புக்கு உள்ளாக்கியமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காலணிகளுக்குள் போ@தைப்பொருள்: சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது

காலணிகளுக்குள் போ@தைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் இன்று (14) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,…

29 0 0
இலங்கை செய்திகள்

செப்டெம்பர் மாதத்திற்குரிய அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்திற்குரிய ‘அஸ்வெசும’ கொடுப்பனவு எதிர்வரும் 16ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை…

27 0 0
இலங்கை செய்திகள்

டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல்!

வாடகை செலுத்தத் தவறியதற்காக, ஹட்டன் டிக்கோயா நகராட்சி மன்றப் பகுதியில் உள்ள 10 கடைகளுக்கு சீல் வைக்க இன்று 14.09.2026 ம் திகதி அன்று ஹட்டன் டிக்கோயா…

31 0 0
இலங்கை செய்திகள்

திருக்கோவில் பிரதேச சபையில் உள்ளூராட்சி வாரம் 2026 ஆரம்பம்!

“வளமான நாடு – அழகான வாழ்வு” மற்றும் “புத்துயிர்க்கும் புதுநகரம்” என்ற தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார நிகழ்வுகள் இன்று (14) திருக்கோவில் பிரதேச சபையில்…

33 0 0