உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

பேருந்துகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
105 பார்வைகள்

கொழும்பு – ஹட்டன் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக ஹட்டன் டிப்போவிற்கு புதிதாக வரவழைக்கப்பட்ட பேருந்துகளை அவசரமாக ஒதுக்கி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் ஹட்டன் இடையிலான பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்துவதற்காக, ஹட்டன் டிப்போவிற்கு புதிய பேருந்துகளை வழங்க வேண்டியுள்ள அவசரத் தேவையை தங்களது உடனடி கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

தற்போது கொழும்பு – ஹட்டன் மற்றும் ஹட்டன்- கொழும்பு வழித்தடங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல பேருந்துகள் மிகவும் பழைய நிலையில் காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி இயந்திரக் கோளாறுகள் மற்றும் திடீர் பழுதுகள் ஏற்படுவதுடன், பயணிகள் நீண்ட நேரம் பேருந்துகளுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் பிரதேசத்தில் வாழும் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை சந்திக்கின்றனர்.

ஹட்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்களது அன்றாடப் பயணங்களுக்காக பொதுப் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர்.

தொழில், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்காகவும் அவர்கள் இந்தப் அரச பேருந்து சேவைகளைப் பயன்படுத்துகின்றனர்.

எனவே, தடையற்றதும் நம்பகமானதுமான அரச பொதுப் போக்குவரத்து சேவை இந்த மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

சமீபத்தில் இலங்கைக்கு புதிதாக பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக நான் அறிகிறேன்.

எனவே, புதிதாக வரவழைக்கப்பட்டுள்ள அந்தப் பேருந்துகளில் இருந்து ஹட்டன் அரச பேருந்து டிப்போவிற்கு தேவையான எண்ணிக்கையில் பேருந்துகளை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கி வழங்கி, கொழும்பு – ஹட்டன் மற்றும் ஹட்டன் – கொழும்பு போக்குவரத்து சேவைகளையும் ஹட்டன் – கண்டி, கண்டி – ஹட்டன், ஹட்டன் – யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் – ஹட்டன், நல்லதண்ணி – கதிர்காமம், கதிர்காமம் – நல்லதண்ணி ஆகிய பகுதிகளில் அரச பேருந்து சேவைகளை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஹட்டன் டிப்போவிற்கு புதிய பேருந்துகளை வழங்குவதன் மூலம் பொதுப் போக்குவரத்தின் நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கணிசமாக மேம்படும்.

இது ஹட்டன், நுவரெலியா மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.

எனவே, இவ்விடயத்தில் தங்களது அவசர கவனத்தை செலுத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு இவ்விடயத்தில் தங்களது அன்பான கவனமும், ஒத்துழைப்பும், தலையீடும் கிடைப்பது பெரிதும் பாராட்டத்தக்கதாக இருக்குமென முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் முரளி ரகுநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளதுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

89 0 0
இலங்கை செய்திகள்

கைக்குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு.!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட…

131 0 0