உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

இலங்கை செய்திகள் 57 நிமிடங்கள் முன்
76 பார்வைகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார்.

இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கலந்து கொண்டார்.

இவருக்கான நியமனம் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பா.முகுந்தன் அவர்கள் மத்திய அரச சேவைக்கு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ஆளுநர் அலுவலக உதவிச் செயலராகக் கடமையாற்றிய க.ஏகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி 21 ஆவது வாரமாகத் தொடரும் மயிலிட்டி மக்களின் போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி மயிலிட்டி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை 21 ஆவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவின்…

103 0 0
இலங்கை செய்திகள்

இந்திய முகாமில் இருந்து தனித்து இலங்கை திரும்பிய 17 வயதுச் சிறுவன் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு!

தமிழகம், அரியலூர் முகாமில் வசித்து வந்த 17 வயது சிறுவன் ஒருவன், தனித்து இலங்கை திரும்பியபோது இலங்கை எல்லையில் கடற்படையினரால் மீட்கப்பட்டுத் தலைமன்னார் பொலிஸாரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

124 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

114 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

92 0 0