உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
11 வெள்ளி

கைக்குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மீட்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
130 பார்வைகள்

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்று, பாதுக்க இஹல போபே பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியிருந்தார்.

இதற்காகச் சந்தேகநபர் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் விதம் அங்கிருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்தது.

சந்தேகநபர் வீட்டின் கதவைத் தட்டிய நிலையில் வீட்டிலுள்ளவர்கள் கதவைத் திறந்தவுடன் வீட்டின் உள்ளே கைக்குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் தூங்கிக்கொண்டிருந்த 11 மற்றும் 17 வயதுடைய இரு பிள்ளைகளும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

இத்தாக்குதலில் அவர்களின் 55 வயதுடைய தந்தையின் காலிலும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் இல்லை எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான இடத்திற்குரிய நீதவான் விசாரணை இன்று காலை மேற்கொள்ளப்பட்டது.

குண்டுத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் ஊடாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட கலந்துரையாடல்!

மன்னாரின் கனிமம் மற்றும் காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட கலந்துரையாடல்! மணல் அகழ்வு அனுமதிகள், வனப்பகுதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி தொடர்பில் முக்கிய முடிவுகள் மன்னார்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளராக க.ஏகாந்தன் அவர்களை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று (11.09.2026) வெள்ளிக்கிழமை ஆளுநர்…

69 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு எதிராக நாளை மாபெரும் உணவு தவிர்ப்பு போராட்டம்.!

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்தி செய்யப்படவில்லை என்று குற்றம்…

88 0 0
இலங்கை செய்திகள்

யானை தாக்கி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொடவெஹெர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுதலியாவ குளத்திற்கு அருகில் காட்டுயானை தாக்கியதில் பலத்த காயமடைந்த வயோதிபர் ஒருவர் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று…

104 0 0