ஹவுதி அமைப்பிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை!
பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கையெழுத்தான இந்த கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, உறுப்பு நாடுகள் எதன் மீதாவது தாக்குதல் நடத்தப்பட்டால் அது அனைவரின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.
ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹவுதிகள் போன்ற தரப்பினரின் நடவடிக்கைகளால் பிராந்திய மோதல்கள் விரிவடையக்கூடாது எனவும், மக்கா ஒப்பந்தம் ஒரு தற்காப்பு மற்றும் தடையூக்கியாக (deterrent) மட்டுமே செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சிறிய தாக்குதலுக்கும் உடனடியாக ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், “செங்கல்லுக்கு பதிலாக கல்லைக் கொண்டு நாம் பதிலடி கொடுக்கத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எல்லை மீறி தாக்குதல்கள் தொடர்ந்தால் ஒப்பந்த விதிகள் தீவிரமடையும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.