உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
129 பார்வைகள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை அடக்குவதற்காக ஊழல் தடுப்புச் சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்திய அவர், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்படும் சாட்சியங்கள் குறித்து எவ்வித நம்பிக்கையும் கொள்ள முடியாது எனச் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரண, லக்ஷ்மன் யாபா அபேவர்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அபேகோன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

81 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0
இலங்கை செய்திகள்

மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்.!

நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய…

120 0 0