உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவனி இன்று வியாழக்கிழமை (10) காலை 9 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பின் (IMSESO) இயக்குனர் சந்தியோகு கொண்சன்டைன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமானது.

குறித்த நடைபவனியில் மதத் தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவினர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.

குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

தொடர்ந்து பஜார் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

113 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

148 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

126 0 0
இலங்கை செய்திகள்

மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்.!

நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய…

119 0 0