உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

மலையக மக்களுக்கான அனைத்து உரிமைகளும் தேசிய மக்கள் சக்தி அரசால் உறுதி செய்யப்படும்.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
121 பார்வைகள்

நீண்ட காலமாக வீட்டுரிமை உள்ளிட்ட ஏனைய உரிமைகள் கிடைக்காத மலையக மக்களுக்கு சம்பள அதிகரிப்பு, வீடு, காணி உட்பட அனைத்து உரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் அரசாக தேசிய மக்கள் சக்தி அரசு செயற்படுகின்றது என்று கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பிரதமருடமான கேள்வி நேரத்தில் மனோ கணேசன் எம்.பி. எழுப்பிய கேள்விகளுக்குப் பிரதமர் தரப்பில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாம் 6 ஆயிரம் வீடுகளை மலையக மக்களுக்காக வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தோம். எனினும் அது இடம்பெறவில்லை என மனோ கணேசன் எம்.பி. தெரிவிக்கின்றார். உண்மையில் அது அவ்வாறில்லை. அதைவிட அதிகமான வீடுகளை நாம் மலையக மக்களுக்காக வழங்கவுள்ளோம்.

வீடு ஒன்றை நிர்மாணிப்பது என்றால் அது ஒரு நாள், இரண்டு நாட்களில் முடியாத காரியம். ஹப்புத்தளையில் ஹல்துமுல்ல, கபரகலை பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி அதனை அந்த மக்களுக்குக் கையளித்தார்.

2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடும் மழை, வெள்ளம் காரணமாக ஒரு லயன் தொகுதி முற்றாக அழிந்தது. அதில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போதைய அரசின் காலத்தில் அதற்கு மாற்றீடாக மூடப்பட்டு மிக மோசமான நிலையிலிருந்த தேயிலைத் தொழிற்சாலையில் அந்த மக்களைத் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிள்ளைகளுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டனர். உண்மையில் அந்த மக்களின் மொழியில் கூறுவதானால் அது ஒரு அகதிகள் முகாமே.

இதுவரை காலமும் அந்த மக்கள் அந்த முகாமில் தான் வாழ்ந்து வந்தனர். ஏதோ காரணங்களால் அப்போதைய அரசால் அவர்களுக்கு வீடு வழங்க முடியாமல் போனது.

எமது அரசு 2025 மார்ச் மாதம் 15ஆம் திகதி அந்த வீடுகளுக்கு அடிக்கல் நாட்டி, இராணுவத்தினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு மூன்றரை வருடங்களாக அகதி முகாமில் வாழ்ந்த மக்களுக்கு 50 வீடுகள் வழங்கப்பட்டன.

அத்துடன் கடந்த அரச காலத்தில் மலையக மக்களுக்கு 7 பேர்ச் காணியே வழங்கப்பட்டது. எனினும் எமது அரசு அதனை மேலும் அதிகரித்து 10 பேர்ச் காணியை அந்த மக்களுக்கு வழங்குகின்றது.

நாம் பூணாகலை பகுதியில் நிர்மாணித்துள்ள வீடுகளின் பெறுமதி காணியுடன் சேர்த்து 83 இலட்சமாகும். அதில் காணிக்கு 5 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்வின்போது மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிப்பத்திரம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல, அது வெறும் காகிதம் மட்டுமே என மனோ கணேசன் எம்.பி. கூறினார். அந்தக் கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். நாம் அந்த மக்களுக்கு நிரந்தர காணி உரிமைப் பத்திரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் அன்று பூணாகலை நிகழ்வில் வைத்து அவ்வாறான 168 காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்கியுள்ளோம்.

மேற்படி காணிகள் தோட்ட நிறுவனங்களின் கீழ் உள்ளமையால் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

காணி சீர்திருத்த ஆணைக்குழு எமது விவசாய அமைச்சின் கீழ் உள்ளது. அந்த நிறுவனத்துடன் கலந்துரையாடி தொடர்ச்சியாக காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் சாதாரண உறுதிப் பத்திரமே வழங்கப்படும். எனினும் பின்னர் நிரந்தர காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் நலன்களும் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன என்பதால் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கு வேதனையாக இருக்கலாம்.

மலையக மக்களுக்கு எமது அரசு உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது என்பதை நாம் குறிப்பிட வேண்டும். அதிகமான வீடுகள் எமது அரசின் காலத்திலேயே நிர்மாணிக்கப்படுகின்றன. அந்த மக்களுக்கு சம்பளத்தை அதிகரித்துக் கொடுத்ததும் எமது அரசாகும்.

எவ்வாறாயினும் நாம் மலையக மக்களுக்குக் காணி வழங்குவோம், வீடுகளையும் வழங்குவோம். சம்பளத்தையும் அதிகரிப்போம். அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

81 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

129 0 0