உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் கைது.!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
90 பார்வைகள்

கொட்டாஞ்சேனை, சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் திகதி சங்கராஜ மாவத்தையிலுள்ள கடையொன்றிற்கு முன்பாக நின்று கொண்டிருந்த நபர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர்களுக்கு மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்று உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதின் போது சந்தேகநபரிடமிருந்து 12 கிராம் 470 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகக் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை அவசரமாக வழங்குமாறு கோரிக்கை.!

மஸ்கெலியா, லக்கம் தோட்டத்தில் சேதமடைந்த லைன் அறைகள் தொடர்பான NBRO அறிக்கையை மீளாய்வு செய்து, பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை அவசரமாக வழங்குமாறு ஜனாதிபதியிடம்…

91 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

81 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0