உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
10 வியாழன்

22ஆவது திருத்தம் ஊடாக தனக்குத் தானே குழி தோண்டும் அரசு.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
98 பார்வைகள்

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக அரசு தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இந்தத் திருத்தத்தால் நாடும் எதிர்க்கட்சிகளும் அழியும் அபாயம் உள்ளன என்றும் எச்சரித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புப் பணியாள் தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
“நான் வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி நபரைக் காணவில்லை. சிறை முழுவதும் தேடியும் அவர் இருக்கவில்லை. உகண்டாவில் பணத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டவரோ அல்லது வெள்ளைப்பூடு, சீனி மற்றும் கடவுச்சீட்டு மோசடிகளுடன் தொடர்புடையவர்களோ எவரையும் சிறையில் காணவில்லை. அனைவரும் வெளியில் தான் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

போரை வென்று, அதிக காலத்துக்கு ஆட்சியில் இருக்க முயன்றவர்கள் 2022ஆம் ஆண்டில் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர். மக்களுக்குப் பொருத்தமில்லாமல் ஆட்சியைத் தக்கவைக்க முயன்ற காரணத்தினாலேயே அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டது. அதேபோன்று, தற்போதைய அரசு தனது இருப்புக்காகவே 22ஆவது திருத்தத்தைக் கொண்டு வருகின்றது. இது அரசு தனக்குத் தானே தோண்டிக் கொள்ளும் குழியாகும்.

தேசிய பண்டிகைக் காலங்களில் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த பொதுமன்னிப்பு வழங்குவது இந்த அரசு வந்த பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டாலும், சில காரணங்களுக்காக அவர்கள் விடுதலை பெறும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் போவது அநீதியாகும்.

இதேவேளை, 70 வயதுக்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள் நடக்கக்கூட முடியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். 18 வயதில் வந்த இளைஞர், புனர்வாழ்வு பெற்று வெளியில் விடப்படாமல் 54 வயதில் சிறையிலேயே உயிரிழந்த சம்பவத்தை நான் சிறையில் அவதானித்தேன். இவ்வாறான விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் சிசுசெரிய பேருந்து சேவை ஆரம்பித்து வைப்பு.!

கிளிநொச்சி மாவட்டத்திற்கான சிசுசெரிய பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு பூநகரி பள்ளிக்குடா சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வு வடமாகாண வீதிப்பயணிகள்…

121 0 0
இலங்கை செய்திகள்

வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடைபவனி.!

சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில்…

80 0 0
இலங்கை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

152 0 0
இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைதுக்கான சாட்சியங்கள் நம்பகத்தன்மையற்றவை.!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சாட்சியங்கள் எவையும் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என அக்கட்சியின் பொதுச் செயலாளர்…

128 0 0