உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
110 பார்வைகள்

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது.

தற்போது அடிக்கடி இவ்வாறான நிலை ஏற்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் சிவனடிபாத மலை பருவ காலத்திற்கு முன்பே சிவனடிபாத மலைக்கு பொறுப்பான இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையின் தேரர் பெங்கமுவே தம்மதின்ன அவர்கள் சிவனடிபாத மலைக்கு உக்கும், உக்கா பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் எனவும் மலை அடிவாரத்தில் இருந்து உச்சி வரை எப் பகுதிகளிலும் உக்கும், உக்கா பொருட்களை விட்டு செல்ல வேண்டாம் எனவும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வெறும் கையுடன் வந்து சமன் தெய்வத்தை தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரிகள், லக்ஷபான இராணுவ முகாம் அதிகாரிகள், அதிரடி படையினர், நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கடும் முயற்சி எடுத்து வந்த போதிலும் இவ்வாறு கழிவுகள் விட்டு செல்லும் நிலை அன்மை காலங்களில் அதிகரித்து வருகிறது.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் உருவான இந்த சிவனடிபாத மலை எமது அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. ஆகவே சிவனடிபாத மலைக்கு செல்லும் போது எவ்விதமான உக்கும், உக்கா பொருட்களையும் கொண்டு செல்ல வேண்டாம் என சிவனடிபாத மலைக்கு பொறுப்பான இரத்தினபுரி பெல்மடுல்ல ரஜமஹா விகாரையின் தேரர் பெங்கமுவே தம்மதின்ன அவர்கள் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் முதல் இலங்கை விமானப்படை அதிகாரிகள் இப் பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் உள்ள குப்பைகளையும் ஏற்கனவே சரிந்து போக்குவரத்து தடை ஏற்பட பகுதிகளையும் சீர் செய்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்.!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணியின் தலைவருமான சுகீஸ்வர பண்டாரவை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை…

94 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

105 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

102 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய கௌரவம்.!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உயரிய அதிகாரப்பூர்வ கௌரவச் சான்றிதழை வழங்கிச்…

83 0 0