உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துபவர்கள் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களே.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
71 பார்வைகள்

பொருளாதார ரீதியில் பாழடைந்திருந்த இலங்கையை மீண்டும் சொந்தக் காலில் நிற்க வைக்கும் நோக்கில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் பங்களிப்பே மிக முதன்மையானது என்றும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் மூலம் கடந்த ஆண்டில் இலங்கைக்கு 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாகக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையைப் போன்றே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனுப்பும் அன்னியச் செலாவணியே நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல பெரிதும் உதவுகிறது.

எனவே, நாட்டிற்குப் பெருமளவு நிதியை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை, பாதுகாப்பு, நலன்புரி மற்றும் அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து பூர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறித்து பொதுமக்களிடையே பொதுவாக நிலவி வரும் எதிர்மறையான கருத்துக்களை மாற்றியமைக்க வேண்டும் எனவும், அந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மையை மேம்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்…

70 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுக்கின்றது அரசு!

அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ…

66 0 0
இலங்கை செய்திகள்

சிறிய கூடாரத்திற்குள் கூட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசு.!

தேர்தல் காலத்தில் பிரம்மாண்ட பேரணிகளை நடத்திய தற்போதைய அரசாங்கம், ஆட்சியை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் தருவாயில், மக்கள் ஆதரவை இழந்து ஒரு சிறிய கூடாரத்திற்குள் கூட்டங்களை…

71 0 0
இலங்கை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் முடக்கம்.!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது…

77 0 0