உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்ட அக்கரைப்பற்று இளைஞன்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
79 பார்வைகள்

நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 341 இளம் பிராந்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக, அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை பகுதியைச் சேர்ந்த சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஊடகத்துறையில் ஆர்வத்துடன் செயற்பட்டு வரும் சுகிர்தகுமார் கிருஸ்மன், சிரேஷ்ட ஊடகவியலாளர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கொண்டவராகவும், ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கலைத்துறையில் ஈடுபட்டு வருபவராகவும் திகழ்கின்றார்.

அத்துடன், இசைத்துறையிலும் சிறந்து விளங்கும் இவர், பல பாடல்களை தனிப்பட்ட முறையில் உருவாக்கி வெளியிட்டுள்ளதுடன், தனது படைப்பாற்றல் மூலம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளார்.

தற்போது ICBT தனியார் பல்கலைக்கழகத்தில் Software Engineering கற்கைநெறியையும் தொடர்ந்து வருகின்றார்.

நல்ல ஊடகக் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் அரசாங்க தகவல் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இளம் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (04) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் திறந்த விண்ணப்பங்கள் கோரப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டதன் பின்னர் தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, ஊடகத்துறையில் ஆர்வமுள்ள பலர் விண்ணப்பித்து நேர்முகத் தேர்வில் பங்கேற்ற நிலையில், திருக்கோவில் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியான இளம் பிராந்திய ஊடகவியலாளராக சுகிர்தகுமார் கிருஸ்மன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இப்பயிற்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் மற்றும் இலங்கை இளைஞர் விவகார பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பயிற்சித் திட்டத்தின் முதலாவது அமர்வு ஜனாதிபதியின் ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டாரவினால் நடத்தப்பட்டது.

இப்பயிற்சித் திட்டத்தின் கீழ் புகைப்படக்கலை, காணொளி தயாரிப்பு, அறிவிப்பாளர் பயிற்சி, பத்திரிகைத்துறை, அபிவிருத்தித் தொடர்பாடல், டிஜிட்டல் ஊடகம் மற்றும் புதிய ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகத்துறையின் பல்வேறு பிரிவுகள் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் இளம் ஊடகவியலாளர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தி, பொறுப்பானதும் தரமானதுமான ஊடகப் பணியை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

தேசிய ரீதியில் இளம் பிராந்திய ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்ட சுகிர்தகுமார் கிருஸ்மனுக்கு அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பை மற்றும் திருக்கோவில் பிரதேச மக்கள், நண்பர்கள் மற்றும் ஊடகத்துறையினர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

70 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

73 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

49 0 0
இலங்கை செய்திகள்

கற்பிட்டியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் படகு.!

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகு ஒன்று புத்தளம், கற்பிட்டிப் பிரதேசத்தில் நேற்றுக் கரை ஒதுங்கியுள்ளது. இந்திய மீனவர்களின் பயன்பாட்டில் உள்ள படகு ஒன்றே இயந்திரமின்றி இவ்வாறு கரை…

65 0 0