உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

சிறைக்குள் நாமலின் உயிருக்கு பேராபத்து; சி.ஐ.டியில் மொட்டு முறைப்பாடு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
72 பார்வைகள்

சிறைச்சாலைக்குள்ளேயே கலவரமொன்றை உருவாக்கி அதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சிக்கின்றனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி நேற்று சனிக்கிழமை சி.ஐ.டியில் இந்த முறைப்பாட்டை கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் நீதித்துறையின் மீதும் சுயாதீன நிறுவனங்கள் மீதும் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ சிறைப்பிடிக்கப்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்பாகவே, சிறைக்குள்ளேயே கலவரத்தை ஏற்படுத்தி அவரது உயிரை மாய்க்கச் சமூக வலைத்தளங்கள் மூலம் திட்டமிட்ட பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைப் போன்றதொரு ஆபத்தான சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவாக எதிர்வரும் வியாழக்கிழமை நாடு முழுவதும் பிரம்மாண்டக் கூட்டங்களை நடத்தத் தயாராகி வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கும் இந்த அறிக்கைகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டமிட்ட அச்சுறுத்தல்களின் பின்னணியில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் செயற்படுவதற்கான தகவல்கள் சி.ஐ.டியிடம் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அச்சுறுத்தல்களுக்குப் பயந்துவிடப் போவதில்லை. கடந்த 24 மணித்தியாலங்களில் கட்சிக்குக் கிடைக்கும் மக்கள் ஆதரவு மூன்று மடங்காகப் பெருகியுள்ளது.

குறிப்பாக, அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தை யாராவது தடுத்து நிறுத்த நினைத்தால், இலங்கை வரைபடத்திலிருந்து அனுராதபுரத்தை அழித்தால் மட்டுமே முடியும். திட்டமிட்டதை விடப் பல மடங்கு அதிகமான மக்களுடன் அந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

70 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

73 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

49 0 0
இலங்கை செய்திகள்

கற்பிட்டியில் கரை ஒதுங்கிய இந்திய மீனவரின் படகு.!

இந்திய மீனவர்களுக்குச் சொந்தமான படகு ஒன்று புத்தளம், கற்பிட்டிப் பிரதேசத்தில் நேற்றுக் கரை ஒதுங்கியுள்ளது. இந்திய மீனவர்களின் பயன்பாட்டில் உள்ள படகு ஒன்றே இயந்திரமின்றி இவ்வாறு கரை…

65 0 0