உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

கடுமையாக வீழ்ச்சியடைந்த கப்பல் போக்குவரத்து!

உலக செய்திகள் 1 மணி நேரம் முன்
44 பார்வைகள்

சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய நரம்பாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணை வழியில் கப்பல் போக்குவரத்து வரலாறு காணாத அளவில் குறைந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Kpler நிறுவனம் வெளியிட்ட ஆரம்பக்கட்ட கண்காணிப்புத் தரவுகளின்படி, வழமையாக தினமும் சராசரியாக 15 கப்பல்கள் கடக்கும் இந்த வழியில், நேற்று வெறும் 4 வணிகக் கப்பல்கள் மட்டுமே பயணித்துள்ளன.

முந்தைய நாள் 9 கப்பல்கள் பயணித்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நேற்று பயணத்திலிருந்த கப்பல்களில் இரண்டு மீடியம்-ரேஞ்ச் டேங்கர்கள், ஒரு காம்சார்மேக்ஸ் (Kamsarmax) டேங்கர் மற்றும் ஒரு ஹேண்டிசைஸ் (Handysize) ரகக் கப்பலும் அடங்கும்.

சில கப்பல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தங்கள் இருப்பிடத்தைக் காட்டும் சிக்னல்களை அணைத்துவிட்டுப் பயணிப்பதால், மொத்த கப்பல்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரான் போரில் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை

ஈரானுக்கு எதிரான போர் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் அமெரிக்க ராணுவத்தில் ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகளுக்கு எந்தவித பஞ்சமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…

54 0 0
உலக செய்திகள்

9 நாட்களுக்குப் பிறகு சுரங்கத்திலிருந்து இருவர் உயிருடன் மீட்பு

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் உருக்குலைந்த நீர்மின் நிலைய சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த இருவர், 9 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 26ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட…

43 0 0
உலக செய்திகள்

காசா மக்களை வெளியேற்றும் திட்டம்

காசாவில் இருந்து பாலஸ்தீனியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் திட்டத்தை இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் கிவிர் முன்வைத்துள்ளார். முதல் ஆண்டில் 2.5 லட்சம் பேரும், அடுத்த…

44 0 0
உலக செய்திகள்

 EOS-05 செயற்கைக்கோள் விண்ணில் ஏவல்

இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில்…

61 0 0