உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
5 சனி

இலங்கைக்கு அதிர்ச்சி – இங்கிலாந்து தொடரிலிருந்து விலகிய முக்கிய 2 வீரர்கள்!

81 பார்வைகள்

இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

எல்.பி.எல் தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைப் பகுதியில் காயமும், பினுர பெர்னாண்டோவுக்கு முதுகில் காயமும் ஏற்பட்டது.

தீவிர சிகிச்சையில் உள்ள இருவரும் இன்னும் குணமடையாததால் இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதையடுத்து, காயமடைந்த குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்காவும், பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்காவும் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

CPL வரலாற்றிலேயே அதிவேக சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார் இலங்கை அணி வீரர் தசுன் ஷானக்க. செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக களமிறங்கிய ஷானகா,…

48 0 0
விளையாட்டுச் செய்திகள்

இந்தியாவில் நடக்கிறது மகளிர் சாம்பியன்ஸ் கிண்ணம்!

இலங்கையில் நடைபெறவிருந்த முதலாவது மகளிர் செம்பியன்ஸ் கிண்ண தொடர், தற்போது இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இடைக்காலக் குழு…

62 0 0
விளையாட்டுச் செய்திகள்

ரசிகர்கள் எதிர்ப்பால் நியுசிலாந்து வீரருக்கு விழுந்த ஆப்பு!

கவுண்டி செம்பியன்ஷிப் போட்டிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட நியுசிலாந்து வீரர் ஸ்காட் குக்கலைன், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஹாம்ப்ஷயர் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். வார்விக்ஷயர்…

71 0 0
விளையாட்டுச் செய்திகள்

அவுஸ்திரேலிய ஒருநாள் அணியில் இருந்து லபுஷேன் நீக்கம்!

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஷேன், சிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடர்களுக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தொடரில்…

67 0 0