உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
54 பார்வைகள்

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37 ஆம் கிராமம் நவகிரி வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்து கிடந்த நாவற்பழத்தை நேற்று மாலை எடுத்துத் தின்ற சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்துள்ளார்.

உடனடியாக அவரைக் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என்று பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவனின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா ரயில் நிலையத்திற்கும் திருகோணமலை ரயில்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(206-09-04) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்…

34 0 0
இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

43 0 0
இலங்கை செய்திகள்

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு…

42 0 0