உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
4 வெள்ளி

நாமல் தான் செய்த தவறை நன்கு அறிவார்; அவர் அச்சமடைவதில் ஆச்சரியமே இல்லை.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
42 பார்வைகள்

“நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தான் என்ன செய்தார் என்பதை நன்கு அறிந்துள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அல்லது இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு ஆகியவை அவர் செய்த அனைத்து விடயங்களையும் இன்னும் முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றாலும், குற்றம் செய்த நபர் தான் எவ்வளவு தூரம் தவறு செய்துள்ளார் என்பதை உணர்ந்திருப்பார்.” – இவ்வாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,
“சான்றுகளின் அடிப்படையில் குற்றங்களை வெளிக்கொணர்வதே புலனாய்வாளர்களின் பணியாகும். தான் செய்த குற்றங்களை அறிந்த ஒருவர் கைது செய்யப்படலாம் என்று அச்சப்படுவதில் ஆச்சரியம் இல்லை. மக்கள் கூட்டத்தைக் கண்டு அரசு பயந்துவிட்டது என்றோ, அரசியல் பழிவாங்கல் காரணமாகக் கைது நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்றோ சொல்வது தவறானது. தவறு செய்தவர்கள் சட்டத்திலிருந்து தப்பியோடாமல் அதை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் குறித்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன. மூன்று வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது.

ஒருவேளை உயர்நீதிமன்றம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறினால் அதற்கும் அரசு தயாராக உள்ளது. சட்ட திருத்தங்களை மேற்கொண்டபோது சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படும் சரத்துகளில் கைவைக்கப்படவில்லை என்பதால் சர்வஜன வாக்கெடுப்பு தேவைப்படாது என்றே நம்புகின்றோம். நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும் அரசு அதற்கு முழுமையாகக் கட்டுப்பட்டுச் செயற்படும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரயிலில் மோதி ஒருவர் உ*யிரிழப்பு.!

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார். குறித்த சம்பவமானது இன்று 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை சீனங்குடா ரயில் நிலையத்திற்கும் திருகோணமலை ரயில்…

1 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று(206-09-04) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்…

34 0 0
இலங்கை செய்திகள்

160 ஆண்டுகளை நிறைவு செய்த இலங்கை காவல்துறைக்கு பிரிடோ நிறுவனம் வாழ்த்து.!

இலங்கையில் காவல்துறை சேவை ஆரம்பிக்கப்பட்டு 160 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்பையும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும்…

43 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாகச் சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை…

54 0 0