உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு; தொடர் வீதி விபத்துக்களால் மக்கள் அச்சம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
73 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், கல்முனை மற்றும் சம்மாந்துறைப் பகுதிகளின் பிரதான வீதிகளில் கட்டாக்காலி நாய்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சத்துடனும் அசௌகரியங்களுடனும் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதிகள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கூட்டம் கூட்டமாக உலா வரும் இந்த நாய்கள், வீதியால் நடந்து செல்பவர்களையும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்களையும் தேடிச் சென்று கடிக்க முற்படுகின்றன. அத்துடன் தப்பிச் செல்ல முற்படும் போது, பயணிகள் வீதியில் விழுந்து காயமடைவதுடன் தொடர்ச்சியான வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.

வெளியிடங்களில் இருந்து நகருக்குள் உட்பிரவேசிக்கும் 20-க்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள், இரவும் பகலும் வீதியோரங்களில் கொட்டப்படும் கழிவுகளைக் கிளறி உண்பதனால் அப்பகுதிகளில் விலங்கினக் கழிவுகள் சிதறிக் காணப்படுகின்றன. இவை உரிய முறையில் அகற்றப்படாததால் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கேடும் உருவாகியுள்ளது.

இரவு நேரங்களில் வீதிகளின் நடுவே கூட்டம் கூட்டமாக நாய்கள் உறங்குவதனால், வீதிப் பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், விபத்துக்கள் மற்றும் நோய் பரவல் அபாயங்களைத் தடுக்கவும் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் உடனடியாகக் தலையிட்டு, இக்கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர…

26 0 0
அம்பாறை செய்திகள்

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாஉல்லாவின் விளக்கமறியல் நீடிப்பு!

பாலியல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் மேயர் அகமது செய்யது சக்கி அதாஉல்லாவை எதிர்வரும் செப்டம்பர் 09ஆம்…

69 0 0
அம்பாறை செய்திகள்

கல்முனை சந்தாங்கேணியில் நீச்சல் தடாகம் திறந்து வைப்பு.!

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் 104 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள உள்ளக விளையாட்டு அரங்கின் அடுத்த கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வும், புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்…

82 0 0