உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரிக்கை

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
69 பார்வைகள்

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தை தற்போதைய இடத்திலிருந்து வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றி, புதிய நிரந்தரக் கட்டடமொன்றை உடனடியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா வலியுறுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தரக் கட்டடம் வேறொரு பொருத்தமான காணியில் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போது பொலிஸ் நிலையம் இயங்கி வரும் காணி அக்கரைப்பற்று மாநகர சபைக்குச் சொந்தமானது எனவும், குறித்த காணி ஆரம்பத்தில் வாடகை அடிப்படையிலேயே வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அக்கரைப்பற்று நகரின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை கருத்திற்கொண்டு அரச காணிகள் மற்றும் வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் கட்டடப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா காரசாரமாக கருத்து வெளியிட்ட காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது அதிகளவில் கவனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) ஏற்பாடு செய்துள்ள “TMMV EXPO 2026” கல்விக் கண்காட்சி நேற்று (09)…

210 0 0
அம்பாறை செய்திகள்

குடியிருப்பு பகுதிக்குள் புகும் யானைகள்; மக்கள் பீதியில்.!

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் தீவிர…

198 0 0
அம்பாறை செய்திகள்

பொலிஸாரின் அதிரடி வேட்டை; ஹெரோயினுடன் சிக்கிய சந்தேக நபர்கள்.!

அம்பாறை பிரதேச குற்ற மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை…

188 0 0
அம்பாறை செய்திகள்

அம்பாறையில் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா

தாய்நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக உயிர்த் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவுகூரும் 42ஆவது போர்வீரர்கள் நினைவு விழா, அம்பாறை மாவட்டத்திலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் நினைவிடத்தில் நேற்று…

109 0 0