உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 28 நிமிடங்கள் முன்
33 பார்வைகள்

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த லேகியம் உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றை பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) முற்றுகையிட்டதுடன் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கஞ்சா கலந்ததாக சந்தேகிக்கப்படும் 400 ற்கும் மேற்ப்பட்ட லேகியப் பக்கற்றுகள் அங்கு கைப்பற்றப்பட்டதுடன் 20 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த லேகியம் வவுனியா நகரை அண்டிய பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த உற்பத்தி நிலையத்தின் உரிமையாளரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ரணில் விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார் அநுர.!

இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது…

39 0 0
இலங்கை செய்திகள்

எம் உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் எமக்கான விடுதலைக் கதவுகளை திறக்கும்.!

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின்…

37 0 0
இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

46 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…

54 1 0