உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

இலங்கை செய்திகள் 31 நிமிடங்கள் முன்
49 பார்வைகள்

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புதிய விலைத் திருத்தங்களின்படி, 92 ஒக்டேன் பெற்றோல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 399 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு, புதிய விலை 475 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மற்றைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதன்படி, ஒட்டோ டீசல் 382 ரூபாய், சுப்பர் டீசல் 478 ரூபாய் மற்றும் மண்ணெண்ணெய் 285 ரூபாய் ஆகிய விலைகளில் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்துக்கு இணங்க, தாமும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

40 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் போ*தைப் பாவனையில் மாணவர்கள்; விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.!

மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.…

34 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் தீப்பரவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை…

66 0 0
இலங்கை செய்திகள்

“நீதிக்கான நீள் பயணம்” : உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள் பயணம்” எனும் மாபெரும்…

81 0 0