உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

எம் உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் எமக்கான விடுதலைக் கதவுகளை திறக்கும்.!

இலங்கை செய்திகள் 23 நிமிடங்கள் முன்
35 பார்வைகள்

“எமது உறவுகளின் கண்ணீர் போராட்டம் ஒரு நாள் நமக்கான விடுதலைக் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. நீதிக்கான இந்த நீள் பயணம் என்பது சர்வதேசத்தின் கதவுகளைத் திறந்து, தமிழர்கள் மீதான காணாமல் போதல்களுக்கான நீதியை நிச்சயம் நிலைநாட்டும்” என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச மாநாட்டில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதியுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. இத்தனை ஆண்டு காலப் போராட்டப் பாதையில், “தங்கள் பிள்ளைகள் நிச்சயம் திரும்பி வருவார்கள்” என்ற பெரும் கனவோடும் நீதிக்கான ஏக்கத்தோடும் போராடிய 260 இற்கும் மேற்பட்ட தாய்மார்களும் தந்தையர்களும் தம் உயிரைப் பறிகொடுத்துள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழு போன்ற அமைப்புகள் மூலமாக உண்மை கண்டறிய முயன்றபோது, சாட்சியமளிக்கச் சென்ற மக்களை இலங்கை புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தினர். வழியிலேயே கொட்டகைகளை அமைத்து மக்களைத் திசைதிருப்பி, சாட்சியம் அளிப்பதைத் தடுத்து நிறுத்தினர். இதனால் மக்கள் எவ்வித பாதுகாப்பும் இல்லாத அச்சச் சூழ்நிலையிலேயே வாழ நேரிட்டதுடன், முழுமையான சாட்சியங்களை வெளிப்படையாக வழங்க முடியாமலும் போனது. இதன் காரணமாக, உள்நாட்டு விசாரணை மற்றும் நீதி வழங்கும் முறைகள் முற்றிலும் முடங்கிப் போய்விட்டன.

உள்நாட்டில் நீதி மறுக்கப்பட்ட நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் தமிழ் மக்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றம் மூலமாக மட்டுமே தங்களுக்குப் பூரண நீதி கிடைக்க முடியும் என்பதைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

2009 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முதன்முதலில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்பட்டபோது, அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆதரவளித்து உதவியது. அன்று முதல் இன்று வரை அப்பிரேரணைகள் வீணாகிவிடாமல், நீதியைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்க நாடு காட்டிவரும் கரிசனையையும் பங்களிப்பையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.” – என்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, “நீதிக்கான நீள்பயணம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு நேற்று நடைபெற்றது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்மாநாட்டை முன்னிட்டு, யாழ்ப்பாணம் நகரில் கவனயீர்ப்புப் பேரணியும் இடம்பெற்றது. பேரணியின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் பேரணியில் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன், கவீந்திரன் கோடீஸ்வரன், வேலன் சுவாமிகள், தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை; ஒருவர் கைது.!

வவுனியா நகரப்பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, வவுனியா பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

26 0 0
இலங்கை செய்திகள்

ரணில் விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றார் அநுர.!

இலங்கை மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அநுர அரசு, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த காபட் விரிப்பிலேயே பயணிக்கின்றது…

37 0 0
இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

45 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…

52 1 0