பொலிஸாரை திணறவிடும் போ*ப்பொருள் வியாபாரி; நடவடிக்கை கோரும் மக்கள்.!
முல்லைத்தீவு தெற்கு, கள்ளப்பாடு, மில்டன் கடையடியில் வசித்து வரும் பௌசிகா எனப்படும் நேமிநாதன் கீர்த்தனா மற்றும் அவரது கணவர் நேமிநாதன் ஆகியோர் ஜஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக தினகரனுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
நேமிநாதன் என்பவர் தற்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும், சிறைச்சாலையில் இருந்து ஜஸ் போதைப்பொருளை பயன்படுத்தியதன் காரணமாக அவரது தண்டனைக் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சனா என்பவர் இவர்களுடன் இணைந்து போதை மாத்திரைகள், ஹெரோயின், ஜஸ் உட்பட பல போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அதுமட்டுமன்றி, குமரேசு மற்றும் அவரது மனைவி சிந்துஜா ஆகியோரும் குறித்த போதைப்பொருள் விற்பனை நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நபர்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் மூலம் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுப்படுவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இவர்களது இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் உயரதிகாரிகள் உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டு சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சார்பாகவும் தினகரன் சார்பாகவும் கோரிக்கை விடுக்கின்றோம்.
குற்றத்தை அம்பலப்படுத்துவோம் குற்றமற்ற நாட்டை உருவாக்குவோம்.