உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மக்கள் பிரதிநிதிகளின் சொத்து விவரங்களை அறியும் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
69 பார்வைகள்

பொதுமக்கள் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், அந்த உரிமையைப் பாதிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தற்போது நாட்டில் பரவலான கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நடவடிக்கைகள், எதிர்காலச் சீர்திருத்தங்கள் மற்றும் இது தொடர்பாகச் சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களுக்கான உண்மை நிலையை விளக்குவதுமே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விவரங்களை மக்கள் எந்த நேரத்திலும் அறிந்துகொள்ள முடியும் என்றும், அதற்குரிய உரிமைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவன அதிகாரிகளின் சொத்துக்களைப் பகிரங்கப்படுத்துவது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்தத் துறைகளில் மட்டுமே சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

“அரசமைப்பைத் திருத்துவதாயின் அதற்குரிய கால அவகாசம் தேவைப்படுவதுடன், நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். திருத்தங்களுக்கு முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் போன்றவற்றுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

அனைத்துத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும். குறிப்பாக, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது, நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையில் உள்ள சவால்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது குறித்து நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் பேராயரிடம் விரிவாக விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

40 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

50 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

67 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

53 0 0