உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்விக் கண்காட்சி!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
124 பார்வைகள்

வட்டு மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டிய கல்விக் கண்காட்சியானது இன்றையதினம் கல்லூரியில் ஆரம்பமாகியது.

இன்று ஆரம்பமாகிய இந்த கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டு, மங்கல விளக்கேற்றி வைக்கப்பட்டு, இறை வணக்கம் இசைக்கப்பட்டு, நாடா வெட்டி வைக்கப்பட்டு கண்காட்சியானது ஆரம்பமானது.

அதன்பின்னர் விருந்தினர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர். இதன்போது மாணவர்கள், கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து ஏனையோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இந்த கண்காட்சியில் மாணவர்களின் கல்வி பாடத்திட்டம் தொடர்பான பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

கல்லூரியின் முதல்வர் வதனி தில்லைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.யூட்ஸ் கருணாகரனும், சிறப்பு விருந்தினராக சங்கானை கோட்டக் கல்விப் பணிப்பாளர் FX பெனின் றொசானும், கௌரவ விருந்தினர்களாக வலி தெற்கு பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி வி.லம்போதரனும், வட்டுக்கோட்டை சமுர்த்தி வங்கி முகாமையாளர்  நீ.அகிலனும், யாழ். போதனா வைத்தியசாலை தாதிய சேவை உத்தியோகத்தர் வி.திவாகரனும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற் பாடசாலை அதிபர்கள், அயற் பாடசாலை ஆசிரியர்கள், அயற் பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0