பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையம் இன்று காலை திறந்து வைக்கபட்டுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அதன் அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தங்கராசா கண்டீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து என்பு முறிவு சத்திர சிகிச்சை நிலையத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியாசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி தங்கராசா கண்டீபன், என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் விமல்ராஜன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
தொடர்ந்து தலைமை உரையினை மருத்துவமனை அத்தியட்சகர் நிகழ்த்தினார். கருத்துரையினை என்பு முறிவு சத்திர சிகிச்சை நிபுணர் விமல்ராஜன் ஆகியோர் நிகழ்த்தியதை தொடர்ந்து என்பு முறிவு சிகிச்சை நிபுணர் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தார்.
இதில் விசேட வைத்திய நிபுணர்களான கங்கை ஆணன், சிவபாலன், பெண் நோயியல் நிபுணர் ரோஹன், பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை நலன்புரி சங்க நிர்வாகிகளான பேராசிரியர் நடராஜசுந்தரம், முன்னாள் மவட்ட செயலர் நீக்லஸ்பிள்ளை, வைத்திய சாலை கணக்காளர் திருமதி ராதை, நிர்வாக உத்தியோகத்தர் பாஸ்கரன், மருத்துவமனை தாதியர்கள், மற்றும் உத்தியோகத்தர்கள், நோயாளர் நலன்புரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.