உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் பதவி நீக்கம் – ஓகஸ்ட் 19 ஆம் திகதி இறுதித் தீர்ப்பு!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
58 பார்வைகள்

சாவகச்சேரி நகர சபையின் துணைத் தலைவர் ஞானப்பிரகாசம் கிஷோரைப் பதவியில் இருந்து நீக்கிய வட மாகாண ஆளுநரின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, நேற்று (05.08.2026) வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், நீதிமன்றம் தீர்ப்பை எதிர்வரும் 2026 ஓகஸ்ட் 19 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஞானப்பிரகாசம் கிஷோரை வடமாகாண ஆளுநர் தனது அதிகாரத்தின் கீழ் பதவியிலிருந்து நீக்கியிருந்தார்.

இந்தப் பதவி நீக்க நடவடிக்கை சட்டவிரோ தமானது எனக் குறிப்பிட்டு, அதனை இரத்துச் செய்யுமாறு கோரி ஞானப்பிரகாசம் கிஷோர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வில் பல தடவைகள் இடம்பெற்றிருந்தன. மனுதாரர் சார்பிலும் பதிலாளிகள் சார்பிலும் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என நீதிமன்றம் முன்ன தாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்றைய நீதிமன்ற அமர்வில் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தீர்ப்பை வழங்காமல் அதனை எதிர் வரும் ஓகஸ்ட் 19 ஆம் திகதி வரை ஒத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன் மூலம் ஞானப் பிரகாசம் கிஷோரின் பதவி நீக்கம் சட்டபூர்வ மானதா? அல்லது இல்லையா? என்பது தொடர் பான நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு மேலும் இரண்டு வாரங்களுக்கு பின்னர் வெளியாகவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

54 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

47 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

72 0 0