உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கருப்பு ஜூலை கலவரத்தின் 43ஆவது நினைவு தினம் இன்று!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
121 பார்வைகள்

1983 ஜூலை 23 கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43 ஆவது வருட நினைவு தினம், இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களால் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது கறுப்பு ஜூலை நினைவேந்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உரையாற்றும்போது,

“இன்று ஜூலை 23 கறுப்பு ஜூலை நினைவு தினம். 43 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தால் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு இன்று வரை நீதி இல்லாமல் உள்ளது. அந்த கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்ட மக்களை இந்தச் சபையில் நினைவுகூருகின்றோம்.” – என்று தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.ஸ்ரீநாத் உரையாற்றும்போது, “இன்றைய நாள் கனத்த இதயத்துடன் பேச வேண்டிய நாள். 1983 ஜூலை 23 தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய கொடுமை இழைக்கப்பட்ட நாள். கடந்த கால வரலாறுகள் நம்பிக்கையீனங்களையும் விரக்திகளையும் தமிழ் மக்கள் மனங்களில் விதைத்துள்ளன. பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாகத் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகவே 1983 ஜூலை 23 இனப்படுகொலை உள்ளது. இது 2009 முள்ளிவாய்க்கால் வரை நீட்சிபெற்றிருந்தது.

இந்த இனப்படுகொலைக்கு நீதி வேண்டி நிற்கும் தமிழ்ச சமூகத்துக்கு இந்த நாட்டில் வழங்கப்பட்ட நீதி என்ன? இதற்கு நீதி வழங்கப்பட்டதாகச் சரித்திரமும் இல்லை, வழங்கப்படுவதற்கான அறிகுறிகளும் இல்லை. இன்று செம்மணியில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் பகுப்பாய்வு செய்வதற்கான சர்வதேச உதவியைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட அனுமதி மறுக்கப்படும் நிலைதான் உள்ளது.” – என்றார்.
……………………….

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

24 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0