உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இன்றும் மட்டக்களப்பில் இடம்பெற்றன!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
67 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.

காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் நீதி அமைச்சு இணைந்து காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இரண்டாவது நாளாக இன்றும் மட்டக்களப்பு மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் முன்னெடுத்தனர்.

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு காணாமல் போனோர் தொடர்பாக அவர்களது உறவுகளினால் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுக்கு அமைய அவர்களின் சாட்சியங்கள் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள காணாமல் போனோரின் உறவினர்களிடம் சாட்சியங்கள் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இதேபோன்று வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இன்றைய தினம் சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சாட்சியங்களுடனான விசாரணைகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியமளித்துள்ளதுடன் வாக்குமூலங்களையும் வழங்கியுள்ளதாக காணாமல்போனோர் அலுவலகத்தின் சிரேஸ்ட சட்டத்தரணி ஜெ.தற்பரன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், தங்களுடைய பூர்வாங்க விசாரணைகளினை மட்டக்களப்பு மாவட்டத்திலே தொடர்ச்சியாக மூன்று தினங்கள் இந்த மாதத்திலே நடத்தி வருகின்றார்கள்.

அந்த வகையிலே இன்றைக்கு ஆரையம்பதி, செங்கலடி மற்றும் வாவுணதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் காணாமல் ஆக்கப்பட்டதாகப் பதிந்து ஏற்கனவே குடும்பங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றார்கள், விசாரணைக்கு பூர்வாங்க விசாரணைக்கு வருகை தருமாறு.

அந்த வகையிலே வருகை தருமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டவர்கள் வருகை தந்து இன்று தங்களுடைய சாட்சிகளுடன், விண்ணப்பதாரிகள் தங்களுடைய வாக்குமூலங்களினைப் பதிந்தனர்.

அதற்கென்று அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் முன்பதாக. இதற்கமைவாக அழைக்கப்பட்டவர்களில் முதலாவது நாள் – நேற்று முன்தினம் 233 பேரும், நேற்று 203 பேரும், இன்றைக்கு இதுவரைக்கும் 150 பேர், மூன்று பிரதேச செயலகப் பிரிவிலுமாக மொத்தம் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த முறைப்பாடுகளினைத் தங்களுடைய சாட்சிகளினை, தங்களுடைய வாக்குமூலங்களினை இங்கே பதிவு செய்திருக்கின்றார்கள்.

இதிலே வருகை தருபவர்கள், அநேகமானவர்கள் ஏற்கனவே தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட அல்லது காணாமல் போனவர்கள் சம்பந்தமாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஆரம்பிப்பதற்கு முன்பதாகவே இறப்பினை உறுதி செய்து இறப்பு அத்தாட்சிப் பத்திரத்தினைப் பெற்றிருக்கின்றார்கள்.

எனவே,  கூடுதலானவர்களுக்கு அந்த இறப்பு சம்பந்தமான விபரங்களினையும் காணாமல் போனமைக்கான காரணங்களினையும் இறப்புச் சம்பந்தமான காரணங்களினையும் நாங்கள் துல்லியமாக அறிய வேண்டிய தேவை இருக்கின்றபடியால், எதிர்பார்த்ததை விடவும் சற்று கால நேரம் கூடுதலாகத் தேவைப்படுகின்ற ஒரு தேவை இருக்கின்றதை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.” என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

24 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

56 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0