மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு.!
லிந்துலை மவுசாகலை மேற்பிரிவு தோட்டத்தில் கோழிக்கறி விவகாரத்தால் ஏற்பட்ட தகராறில் சில நாட்களுக்கு முன்னர் மகனால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த தந்தை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த லிந்துலை மவுசாகலை மேல் பிரிவைச் சேர்ந்த அந்தோணி ராஜா (வயது 65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருந்த மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய மகன் தலைமறைவாக இருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி லிந்துலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கடந்த 20ஆம் திகதி நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.