உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீதித்துறை விவாதத்துக்கு அரசு அனுமதி மறுப்பு; எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் அவசர கூட்டம்.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
49 பார்வைகள்

நீதித்துறை தொடர்பான விடயங்களை நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளச் சந்தர்ப்பம் வழங்காமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட அவசர கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதன்போது ஜனநாயக ஆட்சி முறையின் அடிப்படையான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதித்துறைக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு மற்றும் ‘தடைகள் மற்றும் சமன்பாடுகள்’ ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் விடயங்கள் வெளிப்படையாக நாடாளுமன்ற விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தினர்.

நீதித்துறை தொடர்பான விடயங்கள் குறித்து நாடாளுமன்ற விவாதம் நடத்தச் சந்தர்ப்பம் வழங்காமை ஜனநாயக ஆட்சிக் கோட்பாடுகளைப் பாதிக்கும் செயலாகும் எனக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நாடாளுமன்ற மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர்களுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

இந்த அவசர கூட்டத்தில் ரோஹினி விஜேரத்ன, சித்ரால் பெர்னாண்டோ, வி. இராதாகிருஷ்ணன், சமிந்த விஜேசிறி, கயந்த கருணாதிலக, ஜே. சி. அலவத்துவல, சுஜித் சஞ்சய பெரேரா, காவிந்த ஜயவர்தன, சதுர கலப்பத்தி, கபீர் ஹாஷீம், ரவி கருணாநாயக்க, எம். எஸ். ஏ. வாசித், ரோஹண பண்டார, டபிள்யூ. எச். எம். தர்மசேன, பி.ஆரியவங்ச, தயாசிறி ஜயசேகர, அனுராத ஜயரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹகீம், இராமநாதன் அர்ச்சுனா, நிசாம் காரியப்பர், எம். எஸ். உதுமாலெப்பே, சானக மதுகொட, சுரங்க ரத்நாயக்க மற்றும் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் கண்டறியப்பட்டால் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும்.!

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைத் தேடும் பயணமும், அக்குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்பாடுகளும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், நிவாரணம் வழங்குவதானது…

28 0 0
இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

58 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0