உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

செம்மணி புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
101 பார்வைகள்

இன்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக் குழுவினர், யாழ்ப்பாணம் – செம்மணி, சித்தப்பாத்தி இந்து மயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியை பார்வையிடுவதற்கு வருகை தந்தனர்.

இதன்போது மயானத்துக்கு வெளியே, ஏ-9 வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
எமக்கு உள்ளகப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோரது அலுவலகம் என்பது வெறும் கண்துடைப்பாகவே காணப்படுகிறது. எனவே எமது பிரச்சினைக்கு சர்வதேச விசாரணையே வேண்டும்.

தினம் தினம் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து வெவ்வேறு விதத்திலான கொடூரங்களை எடுத்துக்காட்டும் மனித என்புத் தொகுதிகள் வெளிப்படுகின்றன.

கடந்தகால சிங்கள படைகளாலும் அரசாங்கத்தினானுமே இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டுள்ளது. எனவே இதற்கு சர்வதேச தீர்வு வேண்டும் என்று தெரிவித்தனர்.

போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரது சங்கத்தினர், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொலிஸார் செயற்பட்டதை அவதானிக்க முடிந்தது.

சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய விசேட தூதுக்குழுவினர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் பிரதிநிதிகள் இருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

ஊடகவியலாளர்கள் அந்த குழுவினரிடம் கேள்வியெழுப்ப முயற்சித்தவேளை அதற்கு இடமளிக்காது அவர்கள் சென்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைப் பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனின் பெற்றோர் நேற்று திங்கட்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச்…

2 0 0
இலங்கை செய்திகள்

வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் கைப்பந்து அணி தேசிய ரீதியில் சாதனை!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் ஒன்றான வவுனதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தின் 17 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி 2026ம் ஆண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான…

42 0 0
இலங்கை செய்திகள்

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த அரசும் இனவாதப் போக்கிலிருந்து விலகவில்லை – சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

சொந்த நாட்டிலும் தமிழர்கள் நசுக்கப்படுகிறார்கள்; வேலைவாய்ப்புக்காகச் சென்ற நாட்டிலும் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். எங்களுக்கான உரிமைகளும் சுயநிர்ணய உரிமையும் உறுதிப்படுத்தப்படும் வரை, எங்கு சென்றாலும் நசுக்கப்படும் இனமாகவே நாம்…

32 0 0
இலங்கை செய்திகள்

தலைமன்னார் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான மீன்பிடிப் படகில் இருந்த இரு மீனவர்கள் மீட்பு

தலை மன்னார் வடக்கு கடல் பகுதியில் விபத்தில் சிக்கிய மீன்பிடிப் படகில் இருந்த இரண்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…

29 0 0