உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

செம்மணியில் உட்கார்ந்த நிலையில் மற்றுமொரு எலும்புக்கூடு அடையாளம்

72 பார்வைகள்

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 37ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை, கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் மனித என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாள்கள் மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதற்கமைய இன்று இந்தப் பகுதியில் ஒன்பது என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 6 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நேற்று சனிக்கிழமை அகழ்வுப் பணியின் போது, வித்தியாசமான நிலையில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டது.

அதனைச் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட போதே, மேற்படி நபர் கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை  உறுதி செய்யப்பட்டது.

இந்த என்புக்கூட்டை முழுமையாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இதே போன்ற நிலையில் மற்றுமொரு என்புக்கூடு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், செம்மணி புதைகுழியிலிருந்து கால்களை மடித்து உட்கார்ந்த நிலையில் கண்டெடுக்கப்படும் இரண்டாவது என்புக்கூடு இதுவாகும்.

மேலும், நேற்று அடையாளம் காணப்பட்ட ஒரு பெரியவரின் என்புக்கூடு மற்றும் சிறியவரின் என்புக்கூடு ஆகியவற்றையும் சுத்தப்படுத்தும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

அவற்றையும் நாளை அகழ்ந்து எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரை மொத்தம் 91 நாள்கள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் இதுவரையில் 446 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதில் 434 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

96 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

87 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

82 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

98 0 0