உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 13 மணி நேரம் முன்
102 பார்வைகள்

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்” என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த ஆண்டு 2.3 பில்லியன் டொலராக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, இந்த ஆண்டு 4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதத்தில் வைத்திருக்க வேண்டிய சூழலில், உலக வங்கி அதனை 3 சதவீதமாகவே கணித்துள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை விட்டுச் செல்லும்போது இருந்த அதே 6 பில்லியன் டொலர் மட்டத்திலேயே வெளிநாட்டு கையிருப்பு தேக்கமடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் பொருளாதார நிலை மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள நிலையிலும், அரசு அதற்குத் தீர்வு காணாமல் அரசமைப்புத் திருத்தங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றது.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் ஒன்பது நீதியரசர் வெற்றிடங்கள் உள்ளன. அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல், ஏன் பதவிக்காலத்தை நீடிக்க இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்? இது சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிபதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. இவர்களுக்கு ஒரு சலுகை வழங்கினால், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள் என அனைவரும் இதே கோரிக்கையை விடுப்பார்கள். இவ்வாறான சர்வாதிகாரப் போக்கு நாட்டின் எதிர்காலத்துக்குப் பெரும் ஆபத்தாகும்.

நிர்வாகத் துறை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றால் பொதுமக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு கோர வேண்டும். தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று சொன்னவர்கள், இன்று அதிகாரத்தைப் பலப்படுத்த அரசமைப்பைத் திருத்த முற்படுகின்றார்கள். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்கள் மீது சர்வதேச கண்காணிப்பு உள்ள இன்றைய சூழலில், இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மீதான நம்பிக்கை அதிகரிப்பு என்பது போலியான அறிக்கை.!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீதான மக்கள் நம்பிக்கை 75 சதவீதம் உயர்வடைந்துள்ளது என்று மாற்றுக்கொள்கைக்கான கேந்திர நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் போலியானது” என்று பிவிதுறு ஹெல…

8 0 0
இலங்கை செய்திகள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம் வெற்றி.!

அண்மைக்காலமாக பிராந்தியத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் கழிவுப் பொருட்கள் சேகரிக்கும் விசேட திட்டம்…

9 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது.!

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாலுபோத்த பகுதியில் திங்கட்கிழமை…

10 0 0
இலங்கை செய்திகள்

உயிரை மாய்க்க முயன்ற கைதி.!

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற சிறைக்கூட்டினுள் வைத்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் சவரப் பிளேடால் தனது கழுத்து மற்றும் கையை அறுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம்…

10 0 0