உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
21 செவ்வாய்

விவசாயிகளின் வீழ்ச்சிக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – திலித் ஜயவீர வலியுறுத்தல்!

71 பார்வைகள்

“எமது இலங்கை நாகரிகத்தின் முன்னோடியாகவும் அடித்தளமாகவும் விளங்குவது விவசாய நாகரிகமே ஆகும்.

ஆனால், இன்றைய அரசு இந்நாட்டின் நாகரிகத்தின் முன்னோடி ஒரு சட்டவிரோத மது உற்பத்தியாளர் என்று கூறி, எமது விவசாய பாரம்பரியத்தைச் சீரழிக்க முற்படுகின்றது” என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டிய பிரதேச சபை மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ‘விவசாயிகளின் பேரணி – 2026’ மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

“இந்த நாட்டில் நமக்கென்று தனித்துவமான கலாசாரம் உள்ளது. உலகளாவிய மற்றும் பிராந்திய ரீதியில் நாம் முன்னேற்றமடைய வேண்டுமாயின், எமது கலாசாரத்தை அடித்தளமாகக் கொண்டே செயற்பட வேண்டும்.

உலகில் எந்தவொரு நாடும் தனது கலாசாரத்தைச் சீரழித்து முன்னேற்றமடைந்ததில்லை என்பதை அரசு உணர வேண்டும்.

இன்றைய விவசாயிகள் பெரும் நட்டங்களைச் சந்தித்து வருகின்றனர். நகைகளை அடகு வைத்தும், காணிகளை அடகு வைத்தும், உறவினர்களிடம் கடன் பெற்றும் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

விவசாயம் என்பது தங்களின் கடமை என்று கருதுவதாலேயே இந்தத் தொழிலில் அவர்கள் இன்றும் நிலைத்திருக்கின்றனர்.

விவசாயிகளை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யாத வகையில் கட்டியெழுப்புவதற்கு ‘தொழில்முனைவு’ அணுகுமுறை அவசியம்.

சர்வஜன அதிகாரம் என்ற ரீதியில், விவசாயிகளுக்கு மீண்டும் இவ்வாறானதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்படாதவாறு முறையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.” – என்றார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இது சர்வாதிகாரத்தின் முதல் படி! – நீதியரசர்கள் விவகாரத்தில் அரசுக்கு ராஜித கடும் எச்சரிக்கை

“இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு, நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிப்பதில் மட்டும் அவசரம் காட்டுவது சர்வாதிகாரப் போக்கின் அறிகுறியாகும்”…

78 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் சந்தேகநபர் கைது!

அம்பாறை மாவட்டம் உகண புறநகர் பகுதியில் சுமார் 3050 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் பிரதான கடத்தல்காரர் இன்று காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேக நபர்…

82 0 0
இலங்கை செய்திகள்

இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையின் பின்னரே சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் தொடர்பில் ஒரு முடிவை எட்ட முடியும்!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும், அரச இரசாயனப் பகுப்பாய்வு…

76 0 0
இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தவிசாளராக காத்தான்குடியைச் சேர்ந்த எம்.பீ.எம். பிர்தௌஸ் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்று…

95 0 0