உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
20 ஞாயிறு

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
155 பார்வைகள்

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மாநகர மேயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த எழுத்தாணை மனு, நேற்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கின் பிரதிவாதிகளான வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

பிரதிவாதிகளின் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தமக்குக் கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் கோரினார். மேலும், மனுதாரருக்குச் சாதகமாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணங்களை (தடை உத்தரவு) கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் மன்றுரைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், பிரதிவாதிகள் தமது ஆட்சேபனைகளை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவை ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடித்த நீதிமன்றம், வழக்கை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவிப்பு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன என்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த…

22 0 0
இலங்கை செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய அரபு அமீரகத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரியைச் சந்தித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இந்தச்…

6 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் மீதான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகரிடம் கையளிப்பு!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் அடங்கிய இந்தத் தீர்ப்பைச்…

22 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண் சரிவு!

இன்று மதியம் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா கெந்தகொளை கிறிஸ்தவ தேவாலயம் பகுதியில் பாரிய மண் சரிவு காரணமாக ஹட்டன் பொகவந்தலாவ…

25 0 0