உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

அர்ச்சுனாவிற்கு மனநோய் முற்றியதால் மக்கள், அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
50 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியினால் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், திணைக்கள அதிகாரிகள், பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. குறித்த கூட்டத்தில் விவசாயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது கிளிநொச்சி திருவையாறு பகுதியில் விவசாய செய்கை தேசிய வேலைத்திட்டத்தில் முறைகேடு இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றம் சாட்டினார்.

குறித்த விடயம் தொடர்பில் விமர்சன கருத்துக்களை முன்வைத்த அர்ச்சுனா இராமநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தமையால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதன் காரணமாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட வருகை தந்திருந்த அதிகாரிகள் பொலிசாரின் பாதுகாப்புடன் வெளியேறினர். இதனால் குறித்த அபிவிருத்திக்குழு கூட்டம் அதிகாரிகளின் வெளியேற்றத்தினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு; சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவு.!

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், கெசல்கமு ஓயாவிற்கு அருகில் உள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் இடம்பெற்று…

57 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து.!

இன்று காலை 10.45 மணியளவில் ஹட்டன் நகர மத்தியில் உள்ள வெள்ளைக்கோட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை தவறான திசையில்…

59 0 0
இலங்கை செய்திகள்

தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜாமணி பிரசாந்த் நேற்று…

52 0 0
இலங்கை செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது.!

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் தம்பதியினர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில்…

60 0 0