உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
60 பார்வைகள்

2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் தம்பதியினர் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபரான ஆணிடமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது, இவர்கள் ‘மொதர மயூர’ என்ற பிரபல போதைப்பொருள் கடத்தல்காரனின் கூட்டாளிகள் என்பதுடன் நீண்டகாலமாக இப்போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இருப்பினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் விசாரணைகளின் போது, தான் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளை ஈடுகட்டும் நோக்கிலேயே இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர், சந்தேகநபரான பெண் மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், சந்தேகநபரான ஆடவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் பின்னர் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு; சில பொலிஸ் அதிகாரிகளும் ஆதரவு.!

நோர்வூட் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நோர்வூட் NC தேயிலைத் தோட்டப் பிரிவிலும், கெசல்கமு ஓயாவிற்கு அருகில் உள்ள போர்ட்ரீ (Portree) தோட்டத்திலும் இரவு நேரங்களில் இடம்பெற்று…

57 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து.!

இன்று காலை 10.45 மணியளவில் ஹட்டன் நகர மத்தியில் உள்ள வெள்ளைக்கோட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளை தவறான திசையில்…

59 0 0
இலங்கை செய்திகள்

தோட்டப் பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.!

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை தோட்டப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜாமணி பிரசாந்த் நேற்று…

52 0 0
இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவிற்கு மனநோய் முற்றியதால் மக்கள், அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேற்றம்.!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பியினால் அமைதியின்மை ஏற்பட்டதன் காரணமாக அரச அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் வெளியேறியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று…

50 0 0