உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

யாழ்ப்பாணத்தில் மூதாட்டியின் சங்கிலி அறுப்பு! – மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கைவரிசை!

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
105 பார்வைகள்

யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியில் வைத்து மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுண் தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை யாழ். இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள தேவாலயப் பகுதிக்குச் சமீபமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி மூதாட்டி, மற்றுமொருவருடன் மோட்டார் சைக்கிளின் பின்பக்கத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர்களைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

திடீரென மூதாட்டியின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுத்துக்கொண்ட அந்த நபர்கள், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் போது, திருட்டில் ஈடுபட்ட இருவரும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை மறைக்கும் முகக்கவசங்களை அணிந்திருந்ததாகச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் முறைப்பாடு பெற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளைக் கொண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம்…

1 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

59 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

51 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

78 0 0