உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
48 பார்வைகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், அவர் பாணந்துறை பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருப்பதாக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்றபோதிலும், அந்த நேரத்தில் சரத் வீரவங்ச அங்கு இருக்கவில்லை.

இருப்பினும், அவர் இன்று (16) கம்பஹாவில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

58 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

75 0 0
இலங்கை செய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாத உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு புதிய நடைமுறை!

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தேசிய அடையாள அட்டை இல்லாத பாடசாலை விண்ணப்பதாரர்கள் , தங்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் தேசிய…

62 0 0
இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்களை கைது செய்ய முற்பட்ட போது சம்பவம்!

கட்டுநாயக்க – தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரை கைது செய்வதற்காக பொலிஸார் முயற்சித்துள்ளனர். இதன்போது, குறித்த சந்தேகநபர்களில் ஒருவர் பொலிஸ்…

99 0 0