உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 18 மணி நேரம் முன்
109 பார்வைகள்

அநுராதபுரம், மிகிந்துபுர பகுதியில் இன்று (15) புதன்கிழமை காலை உந்துருளி ஒன்றும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற “சிசு செரிய” பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண் என மூன்று பேர் பயணித்த உந்துருளி, எதிரே வந்த பாடசாலை மாணவர்களுக்கான “சிசு செரிய” பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, உந்துருளியில் பயணித்த இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரும், காயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் பொலன்னறுவை பகுதியிலிருந்து தங்களது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக வந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த மற்றுமொரு நண்பருடன் சேர்ந்து மூவருமாக உந்துருளியில் பயணித்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம்…

1 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

59 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

50 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

77 0 0