உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
16 வியாழன்

இருவேறு பகுதிகளில் இரண்டு சடலங்கள் மீட்பு.!

இலங்கை செய்திகள் 21 மணி நேரம் முன்
106 பார்வைகள்

கலவெல மற்றும் தெரணியகல ஆகிய பகுதிகளில் இருவேறு சம்பவங்களில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, கலவெல, வடமேல் கால்வாயை ஒட்டிய ஹல்மில்லகம பகுதியில் உள்ள ரயில் பாலத்திற்கு அருகில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) கிடைத்த தகவலின் அடிப்படையில் கலவெல பொலிஸார் விசாரணைகளைத் ஆரம்பித்தனர்.

உயிரிழந்தவர் கலவெல பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தவர் என்றும், கடந்த ஜூலை 13ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபகந்த ஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரணியகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைக்கு பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரணியகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வவுனியா மேயர் நீக்கத்துக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு.!

வவுனியா மாநகர சபை மேயரைப் பதவியிலிருந்து நீக்கி வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம்…

1 0 0
இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது!

கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது…

58 0 0
இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரரான சரத் வீரவங்ச, நிதி குற்றப் விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக,…

50 0 0
இலங்கை செய்திகள்

மேர்வின் சில்வா உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்…

77 0 0