உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
13 திங்கள்

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
43 பார்வைகள்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை உயர்மட்ட இராஜதந்திர குழுவின் பிரான்ஸ் விஜயம், தவிர்க்க முடியாத காரணங்களால் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை ஜனாதிபதி ஊடகப்பிரிவும் வெளிவிவகார அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளன.

எதிர்வரும் 16ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போதிலும், ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் திட்டமிட்டபடி எதிர்வரும் 23ஆம் திகதி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பிரான்ஸ் விஜயமானது, பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் இலங்கையின் நகர்வுகளைத் தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.

குறிப்பாக, இலங்கைக் கடற்பரப்பில் பிரான்சின் முன்னணி நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு முனையங்களில் பிரான்சின் சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனம் முதலீடு செய்யக் காட்டும் ஆர்வம் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுகள் இடம்பெறவிருந்தன.

இந்த விஜயத்தின் போது, சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் ரோடால்ஃப் சாடே மஹானாவை ஜனாதிபதி சந்தித்து முதலீட்டுத் திட்டங்களை இறுதி செய்யவிருந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிக்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், ஐரோப்பிய வல்லரசான பிரான்ஸின் இந்த எரிசக்தி மற்றும் துறைமுகப் பிரவேசமானது புவிசார் அரசியலில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நெப்போலியனின் வரலாற்றுப் பார்வையின் நீட்சியாகவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனின் இந்த நகர்வுகள் அமைந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தக்கவைத்தல் மற்றும் பிராந்திய எரிசக்தி அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தல் போன்ற இலக்குகளைக் கொண்ட இந்த உயர்மட்ட விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை, இந்தப் பிரம்மாண்ட திட்டங்களின் எதிர்காலம் குறித்த பல புதிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தாது இனியும் வேடிக்கை பார்க்கப் போகிறீர்களா? – சுகாதார அமைச்சுக்கு மருத்துவர் சமல் சஞ்சீவ சாட்டையடி!

இலங்கையில் தற்போது அதிகரித்து வரும் பாரதூரமான டெங்கு ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசும் சுகாதார அமைச்சும் துரித நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் சிவில்…

15 0 0
இலங்கை செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருவது மிகவும் அவசியம்!

அரசமைப்புத் திருத்தம் ஊடாகத் தற்போது பதவியில் உள்ள நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்க அரசு எடுக்கும் முயற்சி, நிறைவேற்றுத்துறையால் நீதித்துறையினருக்கு வழங்கப்படும் ‘இலஞ்சம்’ அல்லது ‘பரிசு’…

12 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோத துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசசபை உறுப்பினர் கைது!

சட்டவிரோதமாகத் துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில், அம்பலாங்கொட பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அமித் சத்துரங்க சமரநாயக்க, காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால்…

13 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையின் சமையல் அறையில் இருந்து ஆயுதங்கள் மீட்பு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் பெருமளவிலான கூர்மையான ஆயுதங்கள் மற்றும்…

16 0 0