உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற போசணை மாத கண்காட்சி.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
52 பார்வைகள்

போசணை மாதத்தையொட்டி மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏற்பாடு செய்த தேசிய போசணை மாத கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (9) காலை மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரி.ஒஸ்மன் டெனி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.எச்.எம்.அஸாத் கலந்து கொண்டார்.

இதன்போது ‘சிற்றுண்டிகளை பற்றி மீளச் சிந்திப்போம் இயற்கையான மற்றும் ஆரோக்கியமான பாரம்பரிய சிற்றுண்டிகளை தெரிவு செய்வோம்’ எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படுகின்ற பாதிப்புகள் குறித்தும், கையடக்க தொலைபேசியினால் ஏற்படும் சாதக பாதக நிலை குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இதன்போது விழிப்புணர்வு நிகழ்வும் போசணை கண்காட்சியும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0