உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

வலிகாமம் வடக்கில் 12 ஆவது வாரமாகவும் முன்னெடுக்கப்பட்ட காணி மீட்பு போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
69 பார்வைகள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை 12 ஆவது வாரமாகவும் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி, மயிலிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், தங்களுக்குச் சொந்தமான நிலங்களை மீளப் பெற்றுத் தருமாறு வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதமளவில், அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் தங்களின் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். குறித்த பகுதிகள் இன்றும் உயர் பாதுகாப்பு வலயங்களாகவே தொடர்ந்து வருகின்றன.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான காணிகளை விடுவிக்குமாறு கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணிகள் விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக அவர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போராட்டத்தின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா மற்றும் பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

தமது வாழ்வாதாரமான விவசாய நிலங்களையும் வாழிடங்களையும் மீட்டுத் தருமாறு கோரி, உரிமையாளர்கள் தமது கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

65 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

62 0 0