உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சிறைகளில் தொடரும் கொடூரம்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
38 பார்வைகள்

இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போதைய நிலைமை மிகவும் அபாயகரமாக மாறியுள்ளது என்றும், சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் மீது மிகக் கொடூரமான வன்முறைகளை ஏவி வருகின்றனர் என்றும் சிறைக் கைதிகள் உரிமை பாதுகாப்புக் குழுவின் அழைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் சிறைத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் சிறைத்துறை அதிகாரிகள் கைதிகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நீர்கொழும்பு சிறையிலிருந்து ஏனைய சிறைகளுக்கு மாற்றப்படும் கைதிகள் அதிகாரிகளால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்றும், இதில் ஏற்கனவே பல கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அங்குணுகொலபெலஸ்ஸ மற்றும் பூசா சிறைச்சாலைகளிலும் இத்தகைய கொடூரங்கள் அரங்கேறுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“வெலிக்கடை சிறைச்சாலையில் அவிஷ்க கயான் என்ற இளைஞர் அதிகாரிகள் நடத்திய தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்த சென்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளைச் சிறைக்குள் அனுமதிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். அவர் உயிருடன் இருந்தால், உடனடியாக ஊடகங்கள் அல்லது நீதிமன்றம் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி நிரூபிக்க வேண்டும்.” என்றும் சுதேஷ் நந்திமால் சவால் விடுத்தார்.

“சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரின் மௌனம் மற்றும் அலட்சியமான போக்குச் சந்தேகத்தை எழுப்புகின்றது. இவ்வளவு பெரிய வன்முறைகளை அமைச்சர் தெரிந்தே மறைக்கின்றாரா அல்லது இதற்கு அனுமதி வழங்குகின்றாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நேற்று புதன்கிழமை நீதி அமைச்சரைச் சந்தித்துப் பேசுவதற்குத் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, சிறைச்சாலைகள் துறை இயக்குநருடனேயே பேச்சு நடத்த அனுமதிக்கப்பட்டமைக்கு அவர் அதிருப்தி வெளியிட்டார்.

இந்த வன்முறைகள் நாட்டுக்கும் அரசுக்கும் பெரும் கறையை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்த சுதேஷ் நந்திமால், அமைச்சர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு வழங்காவிட்டால், பெருந்திரளான மக்களைத் திரட்டி அமைச்சகத்துக்கு முன்பாக மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

29 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0