உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீதி அமைச்சர் தற்காலிகமாக பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
37 பார்வைகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைக் குழுவின் செயற்பாடுகளுக்குச் சுதந்திரமாக ஒத்துழைப்பு வழங்கும் வகையில், தற்காலிகமாகப் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
“சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதி அமைச்சரிடம், அங்கிருந்த அதிகாரிகள், ‘எங்களுக்கு உத்தரவிட்டிருந்தால் இதனை நகத்தால் கிள்ளி எடுத்திருப்போம்’ எனக் கூறியிருந்தனர். அதாவது, முளையிலேயே கிள்ளியெறியப்பட்டிருக்க வேண்டிய சிறிய பிரச்சினை, உரிய நேரத்தில் தீர்மானங்கள் எடுக்கப்படாமையால் இன்று கோடரியால் வெட்டும் அளவுக்குப் பாரதூரமான நிலைமைக்குச் சென்றுள்ளது.

தடுக்கக்கூடிய நிலையில் இருந்த இந்த வன்முறையை ஏன் தடுக்க முடியவில்லை? கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, அன்று மாலை 12 வெளிநாட்டுக் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர். அப்படியென்றால், அன்றைய தினமே வன்முறையுடன் தொடர்புடையவர்களையும் இடமாற்றியிருக்க வேண்டும். அந்தச் சரியான தீர்மானத்தை ஏன் எடுக்கவில்லை?

நீதி அமைச்சர் இந்தச் சம்பவத்தின் பொறுப்பை ஏற்பதாகக் கூறியிருக்கின்றார். பொறுப்பை ஏற்றுக்கொள்வது மட்டும் போதாது. பொறுப்புக்கூறலும் அவசியம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். அமைச்சராகப் பதவியில் இருந்துகொண்டு இந்தக் குழுவின் முன்னால் சென்று சுயாதீனமாகப் பதிலளிப்பது கடினம். எனவே, தான் குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்தவும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவும் அவர் தற்காலிகமாகப் பதவி விலக வேண்டும்.

புதிய அரசியல் கலாச்சாரம் பற்றிப் பேசும் அரசு, எதிர்க்கட்சியில் இருந்தபோது முன்வைத்த முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும். கடந்த காலங்களில் பல அமைச்சர்கள் தமக்கு எதிரான விசாரணைகளுக்காகப் பதவிகளைத் துறந்து, விசாரணை முடிவடைந்த பின்னர் மீண்டும் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட முன்னுதாரணங்கள் உள்ளன. அதைப் பின்பற்றி நீதி அமைச்சரும் செயற்பட வேண்டும்.” – என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கோர விபத்து; பெண் உட்பட இருவர் உயிரிழப்பு.!

காலி, அம்பலன்வத்தை, அனகாரிக தர்மபால மாவத்தையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்ற உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அம்பலன்வத்தையிலிருந்து…

22 0 0
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலய தேர்த் திருவிழா.!

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு, குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம ஆலயத்தின் சித்திரத் தேர்த் திருவிழா நேற்று ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில்…

28 0 0
இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

74 0 0